Type Here to Get Search Results !

பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு மணிப்பூர் கொடுரம் குறித்து மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு  மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி துன்புறுத்திய கொடுரம் குறித்து மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இந்த கண்டன  ஆர்ப்பாட்டத்திற்க்கு நகர தலைவர் கணேசன் அவர்கள் தலைமை வகித்தார். வட்டார தலைவர் ராஜேந்திரன், வக்கில் குப்பன், நகர பொருளாளர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் கலவரத்திற்க்கும், பெண்களை  நிர்வாண படுத்தி துன்புறுத்தியதையும் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி,பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மூத்த நிர்வாகிகள் சீதாராமன், விவசாய அணி நிர்வாகி அன்பழகன், மேல் தெரு கிருஷ்ணன், பாலாஜி குமார், வெங்கடேசன், ஆனந்தன், கிருஷ்ணன், முருகேசன், ராஜேந்திரன் ஊமையன் (எ) சுப்ரமணி, மாக்கன், வக்கீல் வேணுகோபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டணர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies