Type Here to Get Search Results !

தியாகி சுப்பிரமணி சிவா மணி மண்டபத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மலர் தூவி மரியாதை.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணி சிவா மணி   மண்டபத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் எழுத்தாளர் மற்றும் தூய தமிழ் இயக்க ஆர்வலர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவு நாள் விழா அனுசரிக்கப்பட்டது.


இவ்விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள், மாவட்ட ஆட்சி தலைவர் கி.சாந்தி அவர்கள் மற்றும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும் பாமக கெளரவ தலைவர் ஜி கே மணி அவர்கள் மற்றும் தருமபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், திமுக மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன்  பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் திமுக  நிர்வாகிகள் கலந்துக் கொண்டு தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies