Type Here to Get Search Results !

தளவாய்அள்ளி புதூரில் பாம்பு கடித்து மூதாட்டி சாவு.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தளவாய்அள்ளி புதுர் கிராமத்தை சேர்ந்த விவசாயி தருமன் இவருடைய தாய் கரகூரா (வயது. 65), இவர் கடந்த 16ம் தேதி கால்நடைகளுக்கு தீவனம் அறுக்க சென்றார்.


அவரது நிலத்தில் தீவனம் அறுத்து கொண்டிருக்கும் போது தீவண பயிர்களில் இருந்த பாம்பு மூதாட்டியின் கையில் கடித்தது. மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தார் அவரை உடனடியாக மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


தீவிர சிகிச்சையில் இருந்து வந்த மூதாட்டி கரகூரா இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies