தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் சமூக முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் சமூக முன்னேற்ற சங்கத்தினை சார்ந்த மு. வெங்கடேசன், மாவட்ட செயலாளர் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார், மற்றும் ந. குழந்தைவேல் சமூக முன்னேற்ற சங்க மாநில ஆலோசகர் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்விற்கு ஏழுமலை ஆசிரியர். மாநில பொதுச் செயலாளர். சமூக முன்னேற்ற சங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஜி.கே.மணி பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சி கெளரவ தலைவரும் மற்றும் தருமபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பாமக மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்ந்த முனியப்பன் தமிழாசிரியர், இமா.பாலகிருஷ்ணன், செல்வகுமார், சத்தியமூர்த்தி, மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சமூக முன்னேற்ற சங்கத்தின் சார்பாக பயிற்சி பெற்று தமிழகத்தில் நடைபெற்ற அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது.
.gif)

