Type Here to Get Search Results !

தேசிய அளவில் கராத்தே போட்டி செந்தில் மெட்ரிக் பள்ளி முதலிடம் பெற்று சாதனை.


கடந்த 23ம் தேதி சேலத்தில்  தேசிய அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் அனைத்து நாடுகளிலிருந்தும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இதில் தர்மபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 5ம் வகுப்பு மாணவி தீபிகா, 6ம் வகுப்பு மாணவன் நடராஜ், 11ம் வகுப்பு மாணவன் தீபக் ஆகியோர் தனிநபர் கத்தாப்பிரிவில் கலந்து கொண்டு முதலிடமும், 4ம் வகுப்பு மாணவன் பேட்ரிமிராக்கல் 2 ம் இடத்தை பிடித்து சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் செந்தில் கந்தசாமி, மணிமேகலை  கந்தசாமி,  செயலாளர்   தனசேகரன், நிர்வாக அலுவலர் சக்திவேல், பள்ளி முதல்வர் வள்ளியம்மாள், துணை முதல்வர் கவிதா, பிரைமரி மேற்பார்வையாளர் கல்பனா மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


சாதனைக்கு   வித்திட்ட கராத்தே பயிற்சி அளித்த தென்னிந்திய கராத்தே டூ அசோசியேசன் தலைவரும் பயிற்சியாளருமான கிராண்ட் மாஸ்டர் கியோஷி. நடராஜை  பள்ளி நிர்வாக அலுவலர் சக்திவேல் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies