Type Here to Get Search Results !

போயர்சாலையில் நின்று கொண்டிருந்த பள்ளி வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பெயிண்டர் சம்பவ இடத்திலேயே பலி, இருவர் படுகாயம்.


தர்மபுரி மாவட்டம் அம்பேத்கார் காலணியை சேர்ந்த கெளரிசங்கர் என்பவரின் மகன் தட்சிணாமூர்த்தி (வயது.22), இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை.


இவர் நேற்று  மகேந்திரமங்கலத்தில் உள்ள தனது மாமா வீட்டிற்க்கு வந்தவர், இன்று காலை மகேந்திரமங்கலத்தை சேர்ந்த உறவினர்களாக  ஆதிகேசவன் (வயது .17) தேவராஜ் (வயது.22) ஆகியோருடன் தனது மோட்டார் சைக்கிளில் தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தார், போயர்சாலை அருகே சென்று கொண்டிருந்த போது சாலையோரம் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்ல நின்று கொண்டிருந்த தனியார் பள்ளிவாகனத்தின் பின்புறம் மோதினார்.


இதில் தட்சினாமூர்த்திக்கு தலையில்  பலத்த காயம் ஏற்பட்டு சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார், மோட்டார் சைக்கிளில்  வந்த மற்ற  இருவர் படுகாயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்கைக்காக சேர்க்கப்பட்டனர்.


தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று  தட்சினா மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies