Type Here to Get Search Results !

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் 85 வது பிறந்தநாள் விழா.


பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் 85 வது பிறந்தநாள் விழா, கொல்லாபுரியம்மன் கோவில் அருகே கொண்டாடப்பட்டது. தர்மபுரி மாவட்டம் திப்பம்பட்டி கொல்லாபுரியம்மன் கோவில் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 85 வது பிறந்த நாள் மாவட்டத் துணைத் தலைவர் கே கே முருகன் தலைமையில் கொண்டாடப்பட்டது. 

சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின் கேக் வெட்டப்பட்டு பொது மக்களுக்கு செடிகள் மற்றும் பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டு பிரியாணி கொடுத்து பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மேற்கு கிருஷ்ணமூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் சண்முகம்,  துணை சேர்மேன் மதியழகன், வன்னிய பெருமாள், ஒன்றிய செயலாளர் நாராயணன், சின்னசாமி, பசுமைத்தாயகம் கே என் வீரமணி, கவுன்சிலர் ராஜலிங்கம், முருகேசன், சங்கர், சீனிவாசன், ரமேஷ், மாயக்கண்ணன், பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies