Type Here to Get Search Results !

மணிப்பூர் மதக் கலவரத்தை கண்டித்தும், பொது சிவில் சட்டத்தை கைவிட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.


மணிப்பூர் மதக் கலவரத்தை கண்டித்தும், பொது சிவில் சட்டத்தை கைவிட வலியுறுத்தியும் சமூக நல்லிணக்க மேடை (தமிழக மக்கள் ஒற்றுமை மேடை)  சார்பில் தருமபுரியில் இன்று (20.07.23) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்துக்கு மேடையில் ஒருங்கிணைப்பாளர் பொ.மு.நந்தன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்  பி.தீர்த்தராமன், மாவட்ட துணைத் தலைவர் சங்கர்,  தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், அருட்தந்தையர் சூசைராஜ், மரியப்பன்,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா, சிபிஎம் மாவட்ட செயலாளர் அ.குமார், இரா. சிசுபாலன்,  மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பிரதி சாதிக் பாட்ஷா,  மாவட்ட தலைவர் சுபேதார், சிஎஸ்ஐ செயலாளர் ஜேக்கப் லிவிங்ஸ்டன், டியூக் பொன்ராஜ், திராவிடர் கழக மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் பகுத்தறிவாள கழக மாநில செயலாளர் ஊமை ஜெயராமன், மக்கள் கண்காணிப்பகம் செந்தில் ராஜா, தேசிய லீக் சிக்கந்தர், முஸ்லீம் லீக் நிஜாமுதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கோட்டை மு கலைவாணன், ஆதித்தமிழன், குண்டு சக்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies