வன்னியர் சங்க 44 வது ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு தருமபுரி மாவட்ட வன்னியர் சங்கம் அலுவலகத்தில் கொடியேற்று விழா நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாமக கெளரவ தலைவரும் மற்றும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஜி.கே.மணி அவர்கள் கலந்து கொண்டு கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் தருமபுரி மாவட்ட செயலாளரும் தருமபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எஸ்.பி. வெங்கடேஸ்வரன் அவர்கள் முன்னிலை வகித்தார்.வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இமா.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் பாமக இளைஞர் சங்க மாநில செயலாளர் முருகசாமி, பசுமை தாயக மாநில துணை செயலாளர் மாது ,நகர தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் பாமக வன்னியர் சங்கத்தினை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
.gif)

