இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்று, மகளிர் உரிமை தொகை வழங்குவதில் பெண்களுக்கிடையே பாரபட்சம் காட்டாமல் அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கிடு, அனைத்து துறைகளிலும் நடைபெறும் ஊழலை தடுத்து நிறுத்திடு, மின்கட்டணத்தை குறைத்திடு, ஆறுகளின் குறுக்கே தடுப்பனை கட்டிடு, கஞ்சா, சாராய விற்பனையை உடனே தடுத்து நிறுத்து, மத்திய அரசின் நலத்திட்டங் முடக்காதே உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சசிகுமார், மாநில செயற்குழு உறுப்பிணர் வக்கீல்முனிராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பிணர் கிருஷ்ணன், மண்டல பொதுசெயலாளர் சத்யவேலு, நகர செயலாள் அருன் , மூத்த நிர்வாகி வேடியப்பன், நிர்வாகிகள் சுரேஷ் பாபு, தர்மலிங்கம் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
.gif)

