தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கடமடை கிராமத்தில் உள்ள காந்திஜி சேவாலயத்தில் நடிகர் சூர்யா அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு பாலக்கோடு ஒன்றிய தலைமை மன்ற இயக்கத்தின் சார்பாக ஆதரவற்ற மாணவர்களுடன் மரக்கன்றுகள் நட்டு கேக் வெட்டி பிறந்த நாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதையடுத்து ஆதரவற்ற மாணவர்களுக்கு இனிப்புக்களுடன், அசைவ உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் குமார் தலைமை வகித்தார், ஒன்றிய தலைவர் ரத்தினம், ஒன்றிய பொருளாளர் ஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கார்த்திக், செயலாளர் விஜய், பொருளார் சிவகுமார், மாவட்ட துணை செயலாளர் ராமசந்திரன், மாவட்ட துணைத்தலைவர் ராஜா, ஒன்றிய நிர்வாகிகள் சத்யமூர்த்தி, வேலுசாமி, நஞ்சப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
.gif)


