Type Here to Get Search Results !

காரிமங்கலம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கு 7 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 50 இருக்கைகளை வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம்  அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  மாணவிகளின் சேர்க்கை அதிகமானதால் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய இருக்கைகள்  இல்லாமல் மாணவிகள் நெருக்கமாகவும், தரையில் அமர்ந்தும் படித்து வந்தனர்.

இதனை அறிந்த பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள்  சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து 7 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50  இருக்கைகளை இன்று பள்ளிக்கு   வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுண்சிலர் காவேரி, ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், தலைமை ஆசிரியை சசிகலாதேவி,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies