Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளி ஈ,பி, காலணியில் விவசாயி வீட்டில் 50 ஆயிரம் ரூபாய் திருடிய நபர் கைது.

 

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ஈ,பி. காலணியில் வசித்து வருபவர் மாரியப்பன் (வயது .70) விவசாயி இவரது மனைவி இலட்சுமி, இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர். கடந்த 12ம் தேதி வங்கியிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்தவர் அதனை வீட்டில் உள்ள இரும்பு பெட்டியில் வைத்து விட்டு வீட்டின் கதவை சாத்திவிட்டு குடும்பத்துடன் விவசாய நிலந்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.


வேலை முடித்து வீட்டிற்க்கு வந்தவர் வீடு திறந்து இருந்ததை பார்த்து  சந்தேகமடைந்து இரும்பு பெட்டியை திறந்து பார்த்த போது பெட்டியில் வைத்திருந்த  50 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மாரியப்பன் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகமான நபர்களை விசாரித்து வந்த நிலையில், மாரண்டஅள்ளி காந்தி நகரை சேர்ந்த அஜீத் (எ) குமரன் (வயது .27) என்பவர் பணத்தை திருடியது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies