தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே திருமல்வாடி கிராமத்தில் கால்நடை துறையின் சார்பில் அட்மா திட்டத்தின் மூலம் கால்நடைகளின் குடற்புழு மற்றும் புற ஒட்டுண்ணி நீக்கம் குறித்த செயல் விளக்கம் முகாம் நடைப்பெற்றது.
இதில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல் குறித்து கால்நடை மருத்துவர் தியாகசீலன் அவர்களால் செயல் விளக்கம் செய்து காட்டினார். மேலும் கன்றுகுட்டிகள் மற்றும் ஆடுகள் ஆகியவற்றிற்கு ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
கால்நடைகள் வெறும் வயிற்றுடன் அதிகாலையில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஒரே மருந்தை கொடுக்காமல் மாற்றி தருவது அவசியம் என எடுத்துரைத்தார். கால்நடைகளின் ரோமத்தில் உண்ணி, பேன், தெள்ளு பூச்சி ஆகிய புற ஒட்டுண்ணிகளை நீக்கம் செய்ய ஐவர்மெக்டின் மருந்தை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
இம்முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கு தேவையான லிவர்டானிக், வைட்டமின் சி டானிக், பூச்சி மருந்துகள் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் அவற்றை கால்நடைகளுக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
இந்நிகழ்சியில் வேளாண்மை துணை இயக்குநர் குணசேகரன், தர்மபுரிஉழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் தேவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் அட்மா திட்ட அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்செல்வி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
.gif)

