Type Here to Get Search Results !

புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள  முத்து கவுண்டர்தெருவில் 1.47 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.


இதில் பாலக்கோட்டில் உள்ள 8 வார்டுகளுக்கு உட்பட்ட முத்துகவுண்டர் தெரு,  ரேஷன்கடை தெரு, தீர்த்தகிரி நகர், இடுகாட்டுக்கு செல்லும் பாதை எச்.பி.கேஸ் ஏஜென்சி தெரு, கோட்டை தெரு, கோபால்செட்டி தெரு , கணம் பள்ளி தெரு, மணியகாரன் கொட்டாய் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2.5 கிலோ மீட்டர் தூரம் புதிய தார்சாலை அமைக்க 1.47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் தொடக்க பணிகளை பேருராட்சி தலைவர் பி.கே.முரளி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் பழனி, ஒப்பந்ததாரர் செந்தில்ரங்கநாதன், துனைத் தலைவர்தாஹசினா இதயாத்துல்லா, பேரூராட்சிகவுண்சிலர்கள் நாகரத்தினம், சரவணன், ரவி, மோகன், ஜெயந்திமோகன், ரூஹித், கிளை செயலாளர்கள் கணேசன், பெரியசாமி, சக்திவேல், அரவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies