வன்னியர் சங்க 44வது ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம், பென்னாகரம் நாகமரை பைபாஸ் ரோடு பகுதியில் வன்னியர் சங்க கொடியேற்று விழா பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் ,பா.ம.ககௌரவ தலைவருமான ஜி.கே.மணி அவர்கள் தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஏரியூர் மாவட்ட கவுன்சிலர் சி.வி.மாது ,பசுமை தாயகம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா, பாமக மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார், பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மேற்கு ஒன்றிய தலைவர் அருள்மொழி, கிழக்கு ஒன்றிய தலைவர் வெற்றி, பென்னாகரம் நகர செயலாளர் ஜீவா, நகர தலைவர் சந்தோஷ், பாட்டாளி சமூக ஊடக பேரவை அன்பு பென்னாகரம், முன்னாள் நகர பொறுப்பாளர்கள் நீர் குந்தி மாது, ஆறுமுகம், மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.gif)

