தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வரும் ஏழை எளிய மாணவிகளின் நலன் கருதி தர்ஷன் மற்றும் ஏ.ஏ. ஆர்.டி.அறக்கட்டளை மூலம் 150 மாணவிகளுக்கு தலா 150 ரூபாய் மதிப்பீட்டில் நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட தொகுப்பினை வழங்கு நிகழ்ச்சி இயக்குநர்கள் சக்திவேல், ராஜாங்கம் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு நோட்டு புத்தக தொகுப்பினை வழங்கி மாணவிகள் படிப்பில் ஆர்வம் காட்டி சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொருளாளர் முருகன், விடுதி காப்பாளர் சாந்தி, அறக்கட்டளை நிர்வாகிகள் வெங்கடாசலம், பாபு, கணேசன் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
.gif)

