Type Here to Get Search Results !

அரூரில் சமூக நல்லிணக்க மேடை சார்பில் ஆர்ப்பாட்டம்.


அரூர் பிடிஓ அலுவலகம் முன்பு நேற்று சமூக நல்லிணக்க மேடை சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் சிற்றரசு, தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக  ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அனைவரையும் விசிக மாவட்ட செயலாளர் ஜானகிராமன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பாஜக அரசை கண்டித்தும், பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என கோஷங்கள்  எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் விசிக மண்டல செயலாளர் நந்தன்,, தொகுதி செயலாளர் சாக்கன் சர்மா, செல்லை சக்தி.சோலை ராமசந்திரன், மூவேந்தன் நகர செயலாளர் சித்தார்த்தன், துணை செயலாளர் கேசவன், காங்கிரஸ் மாவட்ட ஆராய்ச்சி துறை தலைவர் ஆர். சுபாஷ் தொகுதி தலைவர் விக்ரம்,வட்டார தலைவர் வஜ்ஜிரம், கணேசன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொருட்பாளர்கள், சுபேதர், நியாஷ், ரபிக், திமுக சார்பில் கட்சி பொறுப்பாளர்கள் முகமதுஅலி, விண்ணரசன், முனுசாமி, சிபிஐ மாவட்ட துணை தலைவர் தமிழ்குமரன, சிபிஎம் மாவட்ட செயலாளர் குமார், அரூர் ஜமாத் தலைவர் சபீர், மற்றும் பல்வேறு  அமைப்புகளைச் சார்ந்த பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies