Type Here to Get Search Results !

முதல்வர் பங்கேற்கும் விழா ஏற்பாடுகளை பார்வையிட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்.


தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 24.07.2023 அன்று தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்ப பதிவு முகாமினை தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிவைப்பதை முன்னிட்டு, மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் முன்னிலையில் இன்று (21.07.2023) தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.


இந்த ஆய்விற்கு பின்னர் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் முதன் முதலில் 1989-ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் தான் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலம் ஏழை எளிய மகளிரைக் கொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்கள் துவங்கப்பட்டது. 


அவரது வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எனும் சிறப்புமிக்கத் திட்டத்தினை அறிவித்து, செயல்படுத்திட உத்தரவிட்டார்கள். அதனைச் செயல்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. 


முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெறும். இரண்டாம் கட்ட முகாம் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெற உள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 24.07.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணி அளவில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்ப பதிவு முகாமினை தொடங்கிவைத்து, விழாப்பேருரை ஆற்ற உள்ளார்கள். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் தெரிவித்தார்கள். 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திருமதி.வெ.தீபனாவிஸ்வேஸ்வரி, இஆப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர்.பி.பழனியப்பன் உட்பட தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies