தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் கம்மம்பட்டி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தில், வெள்ளார் முதல் கோம்பைகாடு வரை ரூபாய் 103.58 இலட்சம் மதிப்பீட்டில், 2.200 கி.மீ புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கும், அதனை தொடர்ந்து, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், தொப்பூர் ஊராட்சி, இராமதாஸ் நகர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் ரூபாய் 2.00 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர் வ.லோகநாதன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் இராஜா, இராஜீவ்காந்தி, வளர்மதி தமிழ்செல்வன், கம்மம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், பாமக மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், கம்மம்பட்டி துணை தலைவர் மாரியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடாசலம், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சதிஷ்குமார், வார்டு உறுப்பினர் உத்திரகுமாரி மற்றும் இராஜேந்திரன், செல்வம் மாணிக்கம், சக்திவேல், குமார், சேகர், இராதாகிருஷ்ணன், மகாலிங்கம் உள்ளிட்ட ஊர்பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.
.gif)

