Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட விவசாயிகள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு "GRAINS" வலைத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். - மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி மாவட்ட விவசாயிகள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு "GRAINS" வலைத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. தமிழ்நாடு அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை உள்ளிட்ட 13 அரசு துறைகளின் திட்டங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக GRAINS என்ற வலைதளத்தில் விவசாயிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.


இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெறமுடியும். விவசாயிகள் ஒவ்வொரு முறையும் அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்பிக்க வேண்டியதில்லை மேலும் விவசாயிகளின் விவரங்கள் வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறமுடியும். இதன் மூலம் வரும் காலங்களில் நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் வங்கி கணக்கிற்கு நேரடி பண பரிமாற்றம் செய்யப்படும்.


எனவே, இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் நில உரிமை ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அல்லது உதவி வேளாண்மை அலுவலர் அல்லது உதவி தோட்டக்கலை அலுவலர்களை அணுகி பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies