Type Here to Get Search Results !

Dr.AMR கிரிக்கெட் கோப்பை நிறைவு விழா; மரு. அன்புமணி இராமதாஸ் MP பங்கேற்பு.


பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்களில் சிலர் சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு போதைப் பொருட்களுக்கு ஆளாகி தங்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் தீய பழக்க வழக்கங்களில் ஈடுபட்டு உடல்அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். தீய செயல்களில் ஈடுபடுவதை தடுத்து, அவர்களின் மனதினை நல்வழிப்படுத்தும் உன்னத நோக்கத்தில் தருமபுரி மாவட்டம், அதியமான் கிரிக்கெட் கிளப் நடத்தும் மாவட்ட அளவிலான Dr.AMR கிரிக்கெட் கோப்பை மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டிகள் தருமபுரி மாவட்டத்தில் ஒன்றிய அளவில் 15 மையங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. 


ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிபெற்று 4 மையங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் இறுதியாக விளையாடும் இரண்டு அணிகளுக்கான போட்டி  ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 2.00 மணியளவில், தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளன. நடுவண் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை மேனாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு இறுதி போட்டியை தொடங்கி வைக்கிறார்கள். அதனை தொடர்ந்து வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்குகிறார்கள். 

அதுசமயம், மாவட்ட அளவிலான கிரிக்கெட் இறுதி போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில் விளையாட்டு வீர்ர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொள்ள வேண்டும் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies