Type Here to Get Search Results !

செட்டிக்கரை பள்ளக்கொள்ளை காளியம்மன் கோயில் மகா தேரோட்ட விழா வெகுவிமர்சையாக இன்று நடைபெற்றது.


தர்மபுரி அருகே செட்டிக்கரை ஊராட்சிக்குட்பட்ட பள்ளக்கொள்ளை கிராமத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயில். இக்கோயில் தேர்த்திருவிழா கடந்த மே 29-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 30-ம் தேதி அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி மற்றும் 31-ம் தேதி அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. 


தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார மகா தீபாரதனை நிகழ்ச்சி நடந்தது. நேற்று விநாயகர் சிறிய தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நாளான இன்று அலங்கரிக்கப்பட்ட காளியம்மன் மகா தேரோட்ட விழா நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் பள்ளக்கொள்ளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 


நாளை பந்தகாசி நிகழ்ச்சி மற்றும் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியுடன் கோயில் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies