Type Here to Get Search Results !

தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருதிற்கு பள்ளப்பட்டி மருதம் நெல்லி கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.


தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது 100 பேருக்கு வழங்கி, தலா ரூ.1 லட்சம் வீதம் பண முடிப்பும் வழங்கப்பட உள்ளது. 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள் (அமைப்புகள்) அல்லது கல்வி நிறுவனங்கள் அல்லது குடியிருப்போர் நலச்சங்கங்கள் அல்லது தனிநபர்கள் அல்லது உள்ளாட்சி அமைப்புகள் அல்லது தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும். 


இதில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள் அல்லது பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர்மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்துக்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை, பிறசுற்றுச்சூழல் தொடர்பான திட்டங்கள் அடங்கும். 




தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதிவாய்ந்த 100 தனி நபர்கள் அல்லது நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். தருமபுரி மாவட்டத்திற்கு 2 விருதுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, அதில் பள்ளபட்டியில் அமைந்துள்ள மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது, தொடர்ச்சியாக மருதம் நெல்லி கல்லூரி நிர்வாகம் பசுமை தொடர்பான  முன்னெடுப்புகளை எடுத்துவருகிறது, குறிப்பாக மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வை மக்கள் இயக்கமாக மாற்றி பொதுமக்களிடம் மஞ்சப்பை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.


இந்த விருதில் பாராட்டு சான்றிதழ் மற்றும் தலா ரூ.1 லட்சம் பண முடிப்பும் வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு தருமபுரியில் எர்ரபையனஹள்ளி ஊராட்சியும், வெண்ணாம்பட்டி சங்கர் என்பவரும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies