Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த கூலித்தொழிலாளிக்கு நிதி உதவி வழங்கிய திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர்.


பாலக்கோடு அருகே பிக்கன அள்ளி ஊராட்சி உமையன் கொட்டாய் கிராமத்தில் வசித்து வரும் கூலித் தொழிலாளி சின்னசாமி மகன் கோவிந்தராஜ் இவருக்கு ரேவதி என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ள நிலையில் கடந்த 2 ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள ஆட்டு கொட்டகையின் மின் விளக்கை ஆன் செய்யும் பொழுது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 


இந்த செய்தியை கேட்ட மாநில விவசாய அணி துணைச் செயலாளரும், ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி பார்வையாளருமான சூடப்பட்டி சுப்பிரமணி அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் சென்று தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 10 ஆயிரத்தை ரேவதிடம் வழங்கினார். மேலும் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தேவையான படிப்பு செலவினைய் ஏற்றுக் கொள்வதாக கூறி அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.


அப்பொழுது காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால், மாவட்ட தொண்டர் அணி தலைவர் குமார், ஒன்றிய அவைத்தலைவர் முனுசாமி ,கிளைக் கழக செயலாளர் நஞ்சுண்டன், வார்டு உறுப்பினர் கோபால் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies