தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த குமாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணமகன் வீட்டார் மினிடோரில் புதுமண தம்பதிகளை மறுஅழைப்பு அழைத்து வருவதற்காக கே.வேட்ரப்பட்டி என்னும் கிராமத்திற்கு மினிஆட்டோவில் சென்றுள்ளனர் அப்போது கூத்தாடிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே அவர்கள் பயணித்த மினிடோர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது.


இதில் பயணித்த ஒரு குழந்தை உட்பட 28 பேருக்கும் காயம் ஏற்பட்டது இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அவசர கால ஊர்தி மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது, பலத்த காயம் அடைந்த நான்கு பேர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இதில் சிக்ச்சை பலனின்றி தருமன் (64) என்பவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களை அரூர் அதிமுக எம்எல்ஏ வே.சம்பத்குமார் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி. திமுவின் மேற்கு மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார் முன்னாள் எம்எல்ஏ ஆர்.வேடம்மாள் நகர செயலாளர் முல்லை ரவி, பாமக கிழக்கு மாவட்ட தலைவர் கு.அல்லிமுத்து, விசிக அரூர் தொகுதி செயலாளர் சி.கே.சாக்கன் சராமா, திமுக நிர்வாகிகள் மதியழகன் விண்ணரசன் முஜீப் வெங்கடேசன் கோட்டிஸ்வரன் இளையராஜா ரகுராமன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் உடன் அரூர் வட்டாட்சியர் பெருமாள், அரூர் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் கொங்கவேம்பு ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் தீர்த்தகிரி உடனிருந்தனர்.