அதன்படி வகுரப்பம்பட்டி (கம்பைநல்லூர் ) சீலநாயக்கனூர் (ஏரியூர்) இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியை முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க. மாநில தலைவருமான டாக்டர் அன்புமணிராமதாஸ் எம்.பி அவரது மகள் சஞ்சுத்ரா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து நடந்த போட்டியில் வகுரப்பம்பட்டி அணி திரில் வெற்றி பெற்று முதலிடமும், சீலநாயக்கனூர் அணி 2-வது இடமும், கடகத்தூர், மாரண்டஅள்ளி ஆகிய அணிகள் 3-வது இடமும் பிடித்தன. இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவுக்கு அதியமான் கிரிக்கெட் கிளப் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர்தொகுதி வெங்கடேஸ்வரன், மாவட்ட கபடி கழக தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில் அனைவரையும் வரவேற்று பேசினார்.


பரிசு அளிப்பு விழாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு மாவட்ட மற்றும்மைய அளவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசு, சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி பேசினார். அதன்படி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த அணிக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், 2-வது பரிசாக ரூ லட்சம், 3-வது பரிசாக 2 அணிகளுக்கு தலா ரூ.50 ஆயி ரம் வழங்கப்பட்டன. மேலும் மைய அளவில் முதலிடம் பிடித்த அணிக்கு முதல் பரி சாக ரூ.20 ஆயிரம், 2-வது பரி சாக ரூ.15 ஆயிரம், 3-வது பரி சாக ரூ.10 ஆயிரம் வழங்கப் பட்டது.அவர் பேசியதாவது இளைஞர்களின் கிரிக்கெட் விளையாட்டுத் திறமையை ஊக்கம் செய்ய வருடத்திற்கு ஒரு முறை இத்தொடர் நடைப்பெறும் என்று அறிவித்தார்.
இந்நிகழ்வில் பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், பாமக மாநில நிர்வாகிகள் பாடி செல்வம், சாந்தமூர்த்தி, முருகசாமி, சண்முகம், மாது, வாசு நாயுடு, செந்தில், மாவட்ட நிர்வாகிகள் செல்வ குமார், பாலாஜி பாலகிருஷ்ணன். சிவகுமார், காமராஜ், நகர நிர்வாகிகள் வெங்கடேசன், சத்தியமூர்த்தி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கத்தினை சார்ந்த நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியினை சுமார் ஆயீரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரில் கண்டு களித்தனர்.