Type Here to Get Search Results !

அரசின் வேலை என கூறி செம்மண் திருடப்படுவதாக குற்றச்சாட்டு.


கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புட்டிரெட்டிபட்டி ஊராட்சியில் கல்லாறு பகுதியில் நீர் தடுப்பணை கட்ட அரசு சார்பில் நிதி ஒதுக்கி தற்பொழுது வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, ஆற்றில் இருந்து எடுக்கப்படும் செம்மண் இரு கரைகளுக்கு பலப்படுத்த பயன்படுத்த வேண்டும் ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் அருகில் இருக்கும் நிலத்தில் ஜேசிபி உதவியுடன் டிராக்டரில் 150 க்கு மேற்பட்ட செம்மண் லோடுகளை தனியார் நிலத்தில் கொட்டி விற்பனை செய்து வருகின்றனர்.


மண் திருட்டை செய்தியாளர் நேரடியாக வீடியோ எடுக்கும் பொழுது ஊராட்சி மன்ற தலைவர் இன்னும் பெரிய கேமராவை பயன்படுத்தி எடுத்து செல் என்று திமிராக கூறிச் சென்றார்,  இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அரசு தடுப்பணை கட்டத்தான் அனுமதி அளித்தது ஆற்றில் இருந்து எடுக்கப்படும் செம்மண் இரு கரைகளுக்கும் பலப்படுத்த பயன்படுத்த வேண்டும் எடுக்கப்படும் செம்மன்களை விற்பனை செய்யக்கூடாது என்று கூறினார், ஆனால் அரசு வேலை என்ற போர்வையில் தொடர் செம்மண் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.


- செய்தியாளர் நந்தகுமார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies