Type Here to Get Search Results !

ஊமையன் கொட்டாய் கிராமத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஊமையன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் (வயது.35) இவரது மனைவி ரேவதி (வயது.32) இவர்களுக்கு பிரவின்குமார் (வயது.14), தனஸ்ரீ (வயது.10) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை கோவிந்தராஜ் தனது குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தார், அப்போது சுவற்றில் இருந்த மின்சாரமீட்டர் மீது எதிர்பாரத விதமாக கை வைத்துள்ளார், உடனே மின்சாரம் தாக்கி அலறியபடி கீழே விழுந்து மயக்கமானார்.


 இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோதித்த மருத்துவர் கோவிந்தராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து மகேந்திர மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies