Type Here to Get Search Results !

பென்னாகரம் நகர திமுக சார்பில் கலைஞரின் 100வது பிறந்தநாள் விழா.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஜூன் 3 முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா பென்னாகரம் பேரூர் கிளையின் சார்பாக 6வது வார்டு கவுன்சிலர், பணி நியமன குழு உறுப்பினர்  மோசின்கான் தலைமையில் நடைபெற்றது.


இதில் திமுகவின் கிளை செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார், கிளை அவைத் தலைவர் பாலு, கிளை பிரதிநிதி நியாஸ், சீனிவாசன், அஸ்லம், இம்ரான்கான்  மற்றும் திமுக  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் கலைஞர் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது, முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். 


- பென்னாகரம் ஒன்றிய செய்தியாளர் S.திருவேங்கடம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies