தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முனைவர் பி .பழனியப்பன் அறிக்கை, அதில், "நீண்ட பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராய் நீண்ட நாட்கள் பணியாற்றிய நம் உயிரினும் மேலான தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூறாவது பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி மக்கள் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் தளபதி அவர்களின் ஆலோசனைக்கிணங்க தர்மபுரி மேற்கு மாவட்டம் முழுவதும் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் அவரவரது இல்லம் முன்பு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் படத்தினை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புடன் கூடிய நலத்திட்ட உதவிகள் வழங்கி மற்றும் புது பொலிவுடன் கழக கொடியை ஏற்றி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவை மிக சிறப்பாக கொண்டாடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு 2023 ஜூன் 3ஆம் தேதி தொடங்கி 2024 ஜூன் 3ஆம் தேதி வரை ஓராண்டு காலம் தொடர் நிகழ்ச்சிகளை நாம் நடத்த உள்ளோம் அதற்கான முன்னேற்பாடுகளையும் கழகத் தோழர்கள் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
.gif)

