தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு திமுக பேரூர் நகர கழக சார்பில் முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பெருவிழா பேரூர் கழக செயலாளரும்,பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் எம்.எம்.முருகன் முன்னிலை வகித்தார்.
முன்னதாக பேரூர் கழக செயலாளர் பி.கே.முரளி திமுக கட்சி கொடி ஏற்றி வைத்து கலைஞர் 100 என்ற தலைப்பில் கலைஞரின் சாதனைகளை பற்றி எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் ரவி, ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர் அழகுசிங்கம், பேரூராட்சி துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா, கவுன்சிலர்கள் மோகன், பத்தேகான், சரவணன் மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.
.gif)

