தர்மபுரி டவுன் காந்திநகர் 27 வது வார்டு நாட்டாண்மைபுரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கோபுரத்தை திமுக நகர செயலாளர் நாட்டான் மாது, தர்மபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது ஆகியோர் தங்களது சொந்த செலவில் சுமார் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் கோபுரத்தை கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர்.


கடந்த ஜூன் 1ம் தேதி மாலை 4 மணிக்கு கணபதி பூஜையுடன் முதல் கால யாகசாலை, பூஜை ஆரம்பிக்கப்பட்டது.நேற்று 2ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் வேதிகார்ச்சனை, நாடிசந்தானம், தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் கடம்புறப்பாடு நடைபெற்று ஆலய விமானத்திற்கும் மூலவ விக்ரகத்திற்கும் மகா கும்பாபிஷேம் நடந்தது.
கும்பாபிஷேகத்தை வைஷ்ய புரோகிதர் ராதாகிருஷ்ணன், வேதபாட ஆசிரியர் சங்கர் சாஸ்திரிகள், இக்கோயிலின் அர்ச்சகர் ஸ்ரீதரன், முனிராஜ் ஸ்டாலின் ஆகியோர் நடத்தி வைத்தனர், கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர் மீது கலச புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்காலையிலும், மதியமும் ஊர் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
.gif)

