தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள பேடரஹள்ளி கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ லஸ்கி நாராயணர் பெருமாள் கோயில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மிகவும் பழமை வாய்ந்த கோயில் இதனை மீண்டும் புனரமைக்கப்பட்டு அதற்கு வர்ணம் பூசி கும்பாபிஷேகம் நடத்தினர்.


முன்னதாக சனி கிழமை முகூர்த்த கால் நடுதல், கங்கணம் கட்டுதல், மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்தல், முலைப்பாளிகை இடுதல் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாக வேள்வி மூல மந்திரம் ஏமம் ஓத பூர்ணாதி தீபாரதனையை தொடர்ந்து ஸ்ரீ லட்சுமி நாராயணர் பெருமாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த விழாவினை விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். பக்தர்கள் ஏராளமான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காலை முதலே பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.