

தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பாக தமிழகம் முழுவதிலும் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறந்த மூன்று கல்லூரிகளை தேர்ந்தெடுத்து இன்று மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் மீண்டும் மஞ்சப்பை விருதுகளை வழங்கினார். இதில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளிலும், பேரூராட்சிகளிலும், பொது இடங்களிலும் மஞ்சப்பை வழங்கியும், நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டதற்காகவும், சுமார் 3000 திற்கும் மேற்பட்ட மஞ்சப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கியதற்காகவும், தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தை கல்லூரியில் நிறுவியதற்காகவும் இவ்விருது மாநில அளவில் வழங்கப்படுகிறது.
தர்மபுரி மாவட்டம் மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி மாநில அளவில் ரூபாய் 10 லட்சம் காசோலையுடன் முதல் பரிசை தட்டிச் சென்றது. விருதினை கல்லூரியின் தாளாளர் டாக்டர் கா. கோவிந்த் அவர்கள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அவர்களிடம் பெற்று கொண்டார்.