தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் அமானிமல்லாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாவளி கிராமத்திலிருந்து அமானிமல்லாபுரம் கிராமம் வரை 1கி.மீ தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடும் அவதி அடைவது மட்டுமின்றி மழைக்காலங்களில் சேரும் சகதியமாக உள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.


மேலும் சாலையில் போதிய தெரு விளக்கு வசதி இல்லாததால் குண்டு குழியுமாக உள்ள சாலையில் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்து வருகின்றனர் .எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு தார் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.