தருமபுரி மாவட்ட திமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி அவர்களின் அறிக்கை, ஒடிசா - சென்னை ரயில் நேற்று இரவு நடைபெற்ற கோர விபத்தில் 230 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்தை தொடர்ந்து தலைமை கழகம் அறிவித்துள்ளபடி தமிழினத் தலைவர் முத்தமிழினர் கலைஞர் அவர்களின் 100-வது பிறந்தநாள் விழா தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் நடைபெறுவதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுகிறது.
அந்தந்த பகுதியில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக செயலாளர்கள் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம்.பெ.சுப்ரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
.gif)

.jpeg)