தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் மற்றும் ஆசிரியர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட தலைவரும், மாநில தலைமை நிலைய செயலாளருமான ராஜி பணி ஓய்வு பெற்றதையடுத்து நேற்று தர்மபுரி அதியமான் அரண்மனையில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.


விழாவிற்கு அரசு அலுவலர் ஒன்றிய தர்மபுரி மாவட்ட தலைவர் குமார் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் தமிழ்மணி, டாக்டர் ஸ்ரீதர், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பக்கிரிசாமி, மாநில இணை செயலாளர் தங்கவேலு முன்னிலை வகித்தனர். செயலாளர் செல்வி வரவேற்றார். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் மற்றும் ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் தண்டபாணி, நிறுவன தலைவர் மணி, ஆகியோர் வாழ்த்தி பேசினர். பணி ஓய்வு பெற்ற ராஜி ஏற்புரையாற்றி பேசினார். இதில் ஞானவேல், அங்கையற்கண்ணி, ரவிசந்திரன், சையத்அப்துல்பாரி, ராஜசேகரன், ஜெயபிரகாஷ், ரூபன்தாஸ், ரகுநாத், வே ணுகோபால், சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.