இந்தியாவில் ரத்ததான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் பொருட்டு கல்கத்தாவை சேர்ந்த ஜெகதேவ் ராவ் என்ற சமூக ஆர்வலர் விழிப்புணர்வு மிதிவண்டி பயணம் மேற்கொண்டு வருகிறார்.


கடந்த 2022 அக்டோபர் 1 ரத்ததான தினத்தில் கல்கத்தாவில் துவங்கிய இவரது மிதிவண்டி விழிப்புணர்வு பயணம் கன்னியாகுமரியில் நிறைவு பெறுகிறது. மொத்தம் 25 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு பயணம். சுமார் 9 மாதங்கள் ஆகும்.
சுமார் 53 வயதான ஜெகதேவ் ராவ் சுமார் 9 மாதங்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் வழியாக சைக்கிளில் பயணம் செய்து ரத்ததான விழிப்புணர்வு செய்து தருமபுரியை வந்து அடைந்தார். அவரை தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்களான இந்தியன் பில்லர்ஸ், மை தருமபுரி, கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன், பசி இல்லா தருமபுரி மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பொறுப்பாளர்கள் வரவேற்று உபசரித்து பாராட்டி வழியனுப்பி வைத்தனர்.