நல்லம்பள்ளியில் ஊராட்சி தலைவர் திருமதி.புவனேஷ்வரி மூர்த்தி தலைமையில் நல்லம்பள்ளி சீட்ஸ்தொண்டு நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறுதானிய உணவு பொருட்கள் கண்காட்சியினை தொடங்கி வைத்தார்.


ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பொறுப்பு திருமதி சுகந்த பிரியா கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார்.மேலும் சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் சரவணன், எர்றபையன அள்ளி ஊராட்சி தலைவர் சிலம்பரசன், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தலைவர் சார்பில் அவர் கணவர் திரு.பெரியசாமி, சின்னபள்ளத்தூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பழனி சமூக ஆர்வலர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்ச்சிமில் 100க்கும் மேலான இளைஞர்கள் மற்றும் சீட்ஸ் தொண்டு நிறுவன தொண்டு நிறுவன மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார்.