பாலியல் துன்புறுத்தல் செய்த பிஜேபி எம்பியை கைதுசெய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஜி.பழணியம்மாள், மாவட்ட செயலாளர் ஏ.சேகர், மாவட்ட மகளீர் துணைக்குழு அமைப்பாளர் பி.எஸ்.இளவேணில், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாநில செயலாளர் ரா.கல்பனா, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் பெ.மகேஸவரி, தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ மாவட்ட நிதிகாப்பாளர் கே.புகழேந்த ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஷ்புஷன் சரன்சிங்க்கை கைது செய்ய கோரியும், நீதிகேட்டு போராடிவரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.