அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்றுவது குறித்து வணிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.கலைராணி தலைமை வகித்தார், பேரூராட்சி தலைவர் இந்திராணி துணை தலைவர் சூர்யாதனபால் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் உள்ள இடங்களில் அரசு அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும், மேலும் வணிக நிறுவனங்கள் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் விளம்பர பேனர்கள் வைக்க வேண்டும் எனில் பேரூராட்சி அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையங்களில் பத்து நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பித்து அனுமதி பெற்று பிளஸ் பேனர்கள் வைக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் திமுக நகர செயலாளர் முல்லைரவி, அதிமுக நகர செயலாளர் பாபு (எ) அறிவழகன், பாமக நகர செயலாளர் பெருமாள், பாஜக நகரதலைவர் ஜெயக்குமார், சிபிஐ பொறுப்பாளர் முருகன், வணிகர்கள் முஜீப், வெங்கடேசன், தீபக்குமார், காவல் உதவி ஆய்வாளர் மதிவாணன், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.