பள்ளி விடுமுறை என்பதால் மகேஸ்வரி மகேந்திரமங்கலம் அருகே நல்லம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்க்கு குழந்தைகளுடன் சென்றார். நேற்று மாலை அத்தூர்னஅள்ளியில் உள்ள ஏரிக்கு ஆடு மேய்க்க பாட்டியுடன் வெற்றிமாறன் (7) என்ற சிறுவனும் சென்றான்.
ஏரியில் சிறுவர்கள் குளித்து கொண்டிருந்ததை கண்ட வெற்றிமாறன் பாட்டிக்கு தெரியாமல் ஏரியில் சென்று குளித்துள்ளான். அப்போது ஏரியில் உள்ள சேற்றில் சிக்கி மூச்சு திணறி மயக்க நிலையில் இருந்துள்ளான், இதனை கண்ட மற்ற சிறுவர்கள் கூச்சலிடவே உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை மீட்டு பாலக்கேடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டது. தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
.gif)

.jpeg)