தருமபுரியில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயமானதாக கூறப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் சமீபத்தில் நேரில் ஆய்வு செய்தார், அதனை தொடர்ந்து குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் துறை தலைவர் காமினி அவர்களின் உத்திரவின்படி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி, சேலம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மோகன் ஆகியோர் தருமபுரியில் 7000 டன் நெல் மூட்டைகள் காணாமல் போனதாக கூறப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல்சேமிப்பு கிடங்கை பார்வையிட்டு விசாரிக்க வந்தனர்.

அப்போது ஏற்கனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் லோகநாதன், துணை மேலாளர் கமலக்கண்ணன் மற்றும் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் நெல் மூட்டைகளை கணக்கெடுத்ததில் நெல் மூட்டைகள் கணக்கு சரியாக உள்ளதாகவும், மூட்டைகளின் எண்ணிக்கையில் ஒருசில குவியலில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாகவும் ஒருசில குவியல்களில் குறைவாகவும் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளது, சமீபத்தில் வரப்பெற்ற நெல் மூட்டைகளில்ன் அளவிலிருந்து அரவைமில்லுக்கு கொடுக்கப்பட்ட நெல் மூட்டைகள் போக மீதமுள்ள நெல் மூட்டைகளை மீண்டும் அரவைக்காக அனுப்பிய பின்னர் தான் மூட்டைகள் குறைகிறதா இல்லையா என கண்டறிய முடியும் என அதிகாரிகள் கூறினர்.
.gif)

