தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்ட நிதியில் ரூபாய் 10.00 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், பள்ளி தலைமை ஆசிரியர், பாமக மாவட்ட துணை செயலாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் முருகன் கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய தலைவர் சிவபிரகாசம், கூட்டுறவு சங்க தலைவர் சிவபிரகாசம், ஊராட்சி மன்ற தலைவர் புவனேஷ்வரிமூர்த்தி, ஒன்றிய பொறுப்பாளர் வளர்மதி உள்ளிட்ட ஆசிரியர்கள் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.
.gif)

