Type Here to Get Search Results !

பாஜகவின் நிர்வாகி சங்கர் படுகொலையை கண்டித்து BSNL அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (42). இவர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜகவில் எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாநில பொருளாளராகவும் இருந்து வந்தார். கடந்த 27ஆம் தேதி கொளத்தூரில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இரவு காரில் சங்கர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலை நசரத்பேட்டை வரதராஜபுரம் அருகே வரும் போது இரண்டு கார்களில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் சங்கரை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே சங்கர் துடிதுடித்து உயிரிழந்தார். 


தர்மபுரி மாவட்ட பாஜக சார்பாக இன்று (2.5.2023) இந்த படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தர்மபுரி பி எஸ் என் எல் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பாஜக தலைவர் ஏபாஸ்கர் தலைமை தாங்கினார், பட்டியலணி மாவட்ட தலைவர் களிறு கண்ணன் முன்னிலை வகித்தார்,  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொதுச் செயலாளர் ஐஸ்வர்யா முருகன், வெங்கட்ராஜ், பொருளாளர் காவேரி வர்மன், பட்டியல் அணி மாநில செயலாளர் சாட்சாதிபதி, தர்மபுரி நகரத் தலைவர் ஜிம் சக்தி, மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, சிறுபான்மை மாவட்ட தலைவர் செபாஸ்டின், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் குமார், பட்டியல் அணி மாவட்ட பொது செயலாளர் சரவணன் பார்த்திபன், மாவட்ட துணைத் தலைவர் மாது சுரேஷ், கந்தையன், மகேந்திரன், மாவட்ட செயலாளர் பி. முருகன், ராமகிருஷ்ணன், பிரஸ் கண்ணன், மாவட்ட பொருளாளர் வேலு, பிரகாஷ், மண்டல தலைவர்கள் பிரபு, அகிலன், முருகன், முனிவேல், ஞானதாஸ், சூரிய தேவன், சண்முகம், சம்பத், அரூர் நகரத் தலைவர் கலையரசன் மற்றும் பாஜகவினர் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர், முடிவில் மாவட்ட செயலாளர் அ கோ கண்ணன் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies