Type Here to Get Search Results !

அரூர் அருகே நூறாண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலம்-குழந்தை பலனுக்காக வேண்டி ரத்தச் சோறு உண்டு பெண்கள் வழிபாடு.


தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கொளகம்பட்டி கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று இரவு காளியம்மன், மாரியம்மன் சாமிகளின் தேர் வீதி உலா நடைபெற்றது. 

அப்பொழுது தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், மாடாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று காலை தேரா வீதி உலாவில் மேள நாளங்களா முழங்க ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். அப்பொழுது ஆண்கள், பெண்கள் அனைவரும் உற்சாகத்தோடு நடனமாடி வந்தனர். 


இதனையடுத்து கோவில் வளாகத்தில் பெண்கள் சங்கராண்டி பொங்கல் வைத்தனர்.  தொடர்ந்து அம்மன் சக்தி அழைக்கப்பட்டு 20க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் இறுதியில்,  குழந்தை பலன் கிடைக்கும் வகையில் ரத்த சோறு வழங்கப்பட்டது. இதனை ஏராளமான பெண்கள் முந்தானையில் பிடித்து உண்டு வழிபாடு செய்தனர். இந்த திருவிழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies