Type Here to Get Search Results !

பொதுமக்களுக்கு மாவட்ட பேரிடர் மேலாண்மை துறையின் முக்கிய அறிவிப்பு.


தருமபுரி மாவட்ட பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை தனி வட்டாச்சியரின் வானிலை தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, அதில்,  இன்று (3.5.23) தர்மபுரி மாவட்டத்தில் அதிக மழை பொழிய கூடும் என  இந்திய வானிலை மையத்தால் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து அனைத்து வட்டாட்சியர்களும் தங்களது வட்டத்திற்குட்பட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள்  மூலம் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் மின்னல் தாக்கி கால்நடைகள் உயிர் இழப்பு ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பான  இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க அறிவுறுத்துமாறும். பொதுமக்கள் மலைப்பொழிவின்போது வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies