Type Here to Get Search Results !

வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு; முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில்  உயர்க்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர்  கே.பி. அன்பழகன். இவர் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக கடந்த 19.01.2022 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வடக்கில் புலன் விசாரணை அதிகாரியாக பழனிச்சாமி என்பவர் நியமிக்கப்பட்டார். கே.பி.அன்பழகன், அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளிட்ட 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான 58 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில் ரொக்கமாக ரூபாய் இரண்டு கோடிக்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டது. 

தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்துவரும் இந்நிலையில் இன்று, கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 45 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாகக் கூறி தருமபுரி குற்றவியல் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர், சுமார் 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கே.பி.அன்பழகன், தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் பெயரில் நிலம், தொழில் முதலீடு என சொத்துகள் சேர்த்துள்ளதாகவும், முறைகேடாக பெற்ற பணத்தை சரஸ்வதி பச்சியப்பன் கல்வி அறக்கட்டளைக்கு அனுப்பியதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies