Type Here to Get Search Results !

கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும்; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துறை, வருவாய்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  தகவல். 

  

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துறை, வருவாய்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையில் இன்று (22.05.2023) நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துறை, வருவாய்துறை, மதுவிலக்கு அமல்பிரிவு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மற்றும் வனத்துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் இன்றைய தினம் நடத்தப்பட்டது. 

 


கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் கள்ளச்சாராயம் தொடர்பான புகாரினை 63690-28922 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம். 

 

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்தத் தொழிலிலிருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கிட சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் மூலமாக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

 

கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கள்ளச்சாரயத்தை முற்றிலும் ஒழித்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள். 

 

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் கீதாராணி (தருமபுரி), ராஜசேகரன் (அரூர் (பொ)), மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) மகேஸ்வரி, உதவி ஆணையர் கலால் (பொ) சாந்தி, அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், மருத்துவத்துறை, வனத்துறை உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies